இந்திய தடுப்பூசி சான்றிதழுக்கு மேலும் 5 நாடுகள் அனுமதி

இந்திய அரசின் கோவிட்19 தடுப்பூசி சான்றிதழுக்கு, மொரிஷியஸ் உள்பட, மேலும் 5 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன.

Update: 2021-11-01 15:00 GMT

கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாக உள்ளது. இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, சான்றிதழை சில உலக நாடுகள் ஏற்காமல் இருந்து வந்தன.

இந்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை மேலும் 5 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டிவிட்டரில் தெரிவித்துள்ளது. எஸ்டோனியா, கிரிக்ஸ்தான், பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் இந்திய அரசு வழங்கும் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 உச்சி மாநாடு மற்றும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்க இத்தாலி, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களுக்கு சென்றார். இந்த பயணத்தின் போது, இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில நாடுகள், இதை  அங்கீகரித்துள்ளன.

அதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு, ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் தந்துள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News