40 percent tax, onion exports, Central Govt-வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி; மத்திய அரசு நடவடிக்கை
40 percent tax, onion exports, Central Govt- வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டுத் தேவையை சமாளிக்கும் நடவடிக்கையாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
40 percent tax, onion exports, Central Govt- ஏப்ரல்-ஜூன் காலத்தில் அறுவடை செய்யப்படும் வெங்காயம்தான் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மறு அறுவடை வரை நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
வெங்காய ஏற்றுமதிக்கு, இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் வெங்காயத்தின் விலை தொடர்ந்து வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தக்காளி விலை, ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதனால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இருப்பினும் சமீப நாட்களாக புதிதாக அறுவடை செய்யப்பட்ட தக்காளி சந்தைக்கு வரத் தொடங்கியதால், விலை படிப்படியாகக் குறைந்து சராசரியாக ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 விலையில் விற்கப்படுகிறது.
வெங்காயத்தைப் போலவே உருளைக்கிழங்கின் விலையும் தொடர் உயர்வை பதிவு செய்துள்ளது. 2023-24 சீசனில் 3 லட்சம் டன் வெங்காயத்தை பத்திரமாக இருப்பு வைக்க அரசு முடிவு செய்திருந்தது. 2022-23 ஆம் ஆண்டில், 2.51 லட்சம் டன் வெங்காயத்தை மட்டுமே இருப்பில் பராமரித்தது.
நாட்டில் வெங்காயத்தின் தேவையைப் பூர்த்தி செய்யவும் விலையைபக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது. ஏப்ரல்-ஜூன் காலத்தில் அறுவடை செய்யப்படும் வெங்காயம், இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் 65 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அதுவே வெங்காயம் மீண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும் வரை நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
விநியோகும் குறையும் பருவத்தில், மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு விநியோகிப்படுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.