வைஷ்ணோ தேவி பக்தர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்

ஜம்முவில் கத்ரா அருகே வைஷ்ணோ தேவி பக்தர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Update: 2022-05-13 13:52 GMT

ஜம்முவில் கத்ரா அருகே வைஷ்ணோ தேவி பக்தர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.

கத்ராவில் உள்ள ஷானி தேவ் கோவில் அருகே மாதா வைஷ்ணோ தேவி சன்னதி அடிவார முகாமிற்கு சென்ற பக்தர்கள் பேருந்து தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.


வாகனத்தின் உள்ளே மர்மமான வெடித்ததைத் தொடர்ந்து தீ ஏற்பட்டது. பலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த சம்பவத்தில் பயங்கரவாத கோணம் இல்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜம்மு மண்டல காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்ராவிலிருந்து ஜம்முவுக்குச் செல்லும் பேருந்து எண் JK14/1831 கத்ராவிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் தீப்பிடித்தது. விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது. எஃப்எஸ்எல் குழு அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என கூறினார்

Tags:    

Similar News