கடந்த 24 மணி நேரத்தில் 35 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன

Update: 2021-04-11 09:30 GMT

இந்தியாவில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 10 கோடியை கடந்தது.

இன்று காலை 7 மணி வரை 10,15,95,147 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன. 85வது நாளான நேற்று, 35,19,987 தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்தியாவில் சராசரியாக, நாள் ஒன்றுக்கு 38,34,574 தடுப்பூசிகள் போடப்படுவதால், உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.92 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கொவிட் பாதிப்பு 55,411-ஆக உள்ளது.நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,81,443-ஆக உள்ளது. இவர்களின் சதவீதம் 90.44%. கடந்த 24 மணி நேரத்தில் 90,584 பேர் குணமடைந்தனர்.

கொவிட் தினசரி உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 839 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News