மணிப்பூரில் பயங்கரவாத குழுக்களால் 3 குக்கி-சோ பழங்குடியினர் சுட்டுக் கொலை

மணிப்பூரில் இன்று காலை பயங்கரவாத குழுக்களால் 3 குக்கி-சோ பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Update: 2023-09-12 06:11 GMT

கோப்புப்படம் 

மணிப்பூரில் உள்ள காங்போப்கி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களால் செவ்வாய்க்கிழமை காலை குகி-சோ சமூகத்தைச் சேர்ந்த மூன்று பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இம்பாலில் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வாகனத்தில் வந்து இம்பால் மேற்கு மற்றும் காங்போகி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள இரெங் மற்றும் கரம் பகுதிகளுக்கு இடையே உள்ள கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

பழங்குடியின மக்களின் ஆதிக்கம் நிறைந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமம். மணிப்பூர் மே 3 முதல் பெரும்பான்மையான மெய்தே சமூகத்தினருக்கும் பழங்குடி குக்கிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்களை சந்தித்து வருகிறது, இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News