உத்தரபிரதேசத்தில் டிராக்டர்-டிராலி விபத்து: 23 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் டிராக்டர்-டிராலி விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2024-02-25 03:52 GMT

உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் டிராக்டர்-டிராலி ஒன்று சனிக்கிழமை கவிழ்ந்து குளத்தில் விழுந்த விபத்தில் எட்டு குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி), அலிகார் ரேஞ்ச் சலப் மாத்தூர் கூறுகையில், வண்டியில் குறைந்தது 30 பேர் பயணம் செய்துள்ளனர் - அவர்களில் பெரும்பாலோர் மாநிலத்தின் ஏடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் - மாசி பூர்ணிமாவைக் குறிக்கும் வகையில் கங்கையில் நீராடச் சென்று கொண்டிருந்தனர்.

விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ட்ராலியில் பயணம் செய்தோரின் மொத்த எண்ணிக்கையும் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் முதல் பார்வையில் டிராலியில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குளத்தில் விழுந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மூழ்காளர்கள் (divers) ஈடுபடுத்தப்பட்டதாக  கூறினார்.

மேலும் காஸ்கஞ்ச் மாவட்ட மருத்துவமனையில் குறைந்தது நான்கு பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், வாகனம் விழுந்த குளம் சுமார் 8 அடி ஆழம் கொண்டது, ஆனால் மணல் படிவு மீட்புப் பணிகளைத் தடுத்தது.

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் செங்கல் சூளை வைத்திருக்கும் பிரவீன் குமார், மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ஒரு JCB இயந்திரத்துடன் அந்த இடத்திற்கு வர காவல்துறை கேட்டுக் கொண்டதாகவும், 13 சடலங்களை மீட்க உதவினோம். அப்போது சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்,” என்றார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் X-ல் ஒரு பதிவில் "உத்திரபிரதேசத்தின் காஸ்கஞ்சில் டிராக்டர் டிராலி குளத்தில் விழுந்த விபத்து வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். இதனுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

தனி ட்வீட்டில், பிரதமரின் அலுவலகம், "காஸ்கஞ்ச் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் அன்புக்குரியவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்." என்றது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதிவில் "காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு மிகவும் இதயத்தை உருக்கும். இழப்பு குடும்பத்தினருக்கு எனது இரங்கல். அனைத்து காயமடைந்தவர்களுக்கும் இலவசமாக உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்று  பதிவிட்டுள்ளார்.

இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "இது மிகவும் சோகமான மற்றும் இதயத்தை உருக்கும் சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் மற்றும் காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறோம்" என்றார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

X-இல் இந்தியில் ஒரு பதிவில், யாதவ் கூறியதாவது: கங்கையில் நீராடிய பின் திரும்பும் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர்-டிராலி குளத்தில் கவிழ்ந்து காஸ்கஞ்சில் ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்." பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

இதேபோன்ற கருத்தை பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறினார்: “இழப்பு குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு கூடிய விரைவில் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.” என்றார்.

Tags:    

Similar News