நேபாள விமான விபத்தில் 22 பேரின் உடல்களும் மீட்பு
nepal india news - நேபாள விமான விபத்தில் சிக்கிய 22 பேரில் 22 பேரின் உடல்களும் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
nepal india news - நேபாளத்தில் 4 இந்தியர் உள்ளிட்ட 22 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் நேற்று முன்தினம் காலை மாயமானது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் சென்ற விமானம் காலை 9.55 மணியளவில் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஸ்டாங் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் நேபாளம் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
latest news of nepal
இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணி தொடங்கி, அதனையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். இந்த கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.