ஜனவரி 16-ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை படைத்துள்ளது.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 56-ஆம் நாளில் (மார்ச் 12, 2021) 30,561 முகாம்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட (20,53,537) தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. ஒரு நாளில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் இது மிகவும் அதிகமாகும்.
இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 4,86,314 முகாம்களில் 2.82 கோடி (2,82,18,457) பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 72,93,575 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 41,94,030 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 72,35,745 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 9,48,923 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 12,54,468 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 72,91,716 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 2.02 லட்சம் பேர் (2,02,022) கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.78 சதவீதமாகும்.கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 87.72 சதவீதம் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 24,882 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,73,260 ஆக (96.82%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 19,957 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19-ஆல் 140 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.