2024 லோக்சபா தேர்தல்..... பாஜ ஹாட்ரிக் வெற்றியைத் தடுக்க எதிர்க்கட்சிகள் பிளான்: பாதிக்குமா?....

2024 lokshaba election,opposition party plan மத்தியில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜ வரும்2024 லோக்சபாவில் மீண்டும் வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றியாகும். காட்சியும், கட்சியும் மாறுமா?....படிங்க....

Update: 2023-04-19 14:48 GMT

பாஜ எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ள போட்டோ  ( கோப்பு படம்)

2024 lokshaba election,opposition party plan

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் ஹாட்ரிக் சாதனைதான். அதனைத் தடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரகூக்குரல் எழுப்பி வருகிறது. இரு அஸ்திரங்களை முன்வைத்து பாஜவை மீண்டும் ஆட்சிக்கு வராமலிருக்கும்படி பிரச்சார பயணத்தை துவக்க உள்ளதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் திட்டமிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பதில் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை சமரசம் செய்து கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் தலைவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

2024 lokshaba election,opposition party plan


2024 lokshaba election,opposition party plan

அண்மையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய பீகார் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில் ஆளும் பாஜவை வீழ்த்த வேண்டுமெனில் சமூக நீதி அரசியலைக் கையில் எடுத்தால் மட்டுமே நாம் தேர்தலில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார். இதனை மையமாக வைத்து காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே மத்திய அரசானது நடத்த வேண்டும்.இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பு நீக்கப்பட வேண்டுமென இரண்டு கோரிக்கைகளை மையமாக முன் வைத்து பேசினார்.

2019ம் ஆண்டு இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தலின்போது மோடி என்ற ஜாதிப்பெயர் பற்றி சர்ச்சைக்கு உரிய கருத்தை தெரிவித்ததால் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ராகுல் மீது அதிக கோபத்தில் உள்ளனர்.

இந்த கோபத்தினைக்குறைக்கும் விதமாக அவர்களுக்கு ஆதரவாகவே இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும் என்ற அஸ்திரத்தினை ராகுல் தற்போது கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

2024 lokshaba election,opposition party plan


2024 lokshaba election,opposition party plan

தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜவின் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற விவகாரங்களில் ஒருமித்த குரலை எதிர்க்கட்சிகள் கடுமையாக வெளிப்படுத்தின. ஆனால் அதே நேரத்தில் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு குரலை எழுப்பவில்லை எனற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு உச்சவரம்பு விவகாரம், அனைத்து கட்சியினர் இடையே ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமையோடு எதிர்க்கும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்ரமேஷ், தெரிவிக்கும்போது முன்னாள் காங். தலைவர் ராகுல் ஒற்றுமை யாத்திரை சென்ற போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை பெருவாரியான பொதுமக்கள் முன் வைத்தனர்,இதனை வைத்தே இதை முன்னிலைப்படுத்த முடிவுசெய்தோம் என்றனர்.

ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இருந்தாலும் அக்கட்சியும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உடன்படும் நிலையில்தான் உள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாஜவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் இந்த கருத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 lokshaba election,opposition party plan


2024 lokshaba election,opposition party plan

பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், உ.பியின் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆகிய எதிர்க்கட்சிகள் அனைத்துமே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஒருமித்த குரலில் கோரிக்கை வைக்கிறது. இந்த கோரிக்கைகள் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்கும் என நம்பப்படுகிறது.

2024 ம் ஆண்டில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலின்போது பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்து பிரச்சாரக் களத்தில் இறங்க தீர்மானித்துள்ளன. இதற்கு ஆளும் கட்சியான பாஜ எந்த வகையில் சமாளிக்கும் என்பதை நாம் உற்று நோக்கும் வகையில் உள்ளோம். பாஜவை வீழ்த்த அனைத்து மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக உள்ள பாஜ எதிர்ப்பு கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பலம் அதிகமாகுமா? அல்லது இவையனைத்தையும் பிரதமர் மோடி, அமித்ஷா சரியான வியூகம் வைத்து சமாளித்து மீண்டும் மூன்றாவது முறையாக பாஜ ஆட்சியைப் பிடிக்க திட்டமிடுவார்களா?

2024 lokshaba election,opposition party plan


2024 lokshaba election,opposition party plan

மீண்டும் பாஜவே ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இது இந்தியாவைப் பொறுத்தவரை பெரும் சாதனையாகவே கருதப்படும். ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற குரலானது பாஜவில் ஓங்கி ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, கேஸ்சிலிண்டர் விலை, என விரல்விட்டுக்கொண்டே போகலாம்... மத்திய அரசின் ஆட்சியை மாற்ற ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் எதிர்ப்பு இருந்தால் போதாது ஒட்டு மொத்த மற்ற மாநிலங்களிலும் இதே போன்று எதிர்ப்பு அலை வீசினால் மட்டுமே காங்கிரஸ் கரை சேரும்...இல்லாவிட்டால் மீண்டும் தத்தளிப்புதான்...

மூன்றாவது முறையாக பாஜ ஆட்சிக்கு வர முயல வியூகம் அமைக்கும்போது, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்து மெஜாரிட்டியை இழந்து தவிக்கிறது காங்கிரஸ் . அனைத்து மாநிலங்களிலும் நிர்வாகிகளைச் சந்தித்து முறையாக களப்பணி ஆற்ற தேவையான முன்னெடுப்பு நடடிவக்கைகளை கட்சித்தலைமை இப்போதே வியூகம் அமைக் கவேண்டும். அதேபோல் கட்சியில் நிலவி வரும் கோஷ்டிப்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து மாநிலத்திலும் உள்ள காங்கிரசார் ஒற்றுமையோடு தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டும். அப்போது மட்டுந்தான் பாஜ வை எதிர்க்க முடியும்... இனியாவது இவர்கள் களமிறங்க தயாராவார்களா?....கோஷ்டிப்பூசலை மறந்து...பொறுத்திருந்து பார்ப்போம்.... 

Tags:    

Similar News