டெல்லியில் இந்த ஆண்டின் காற்றுத் தரம் குறித்த கண்ணோட்டம்
டெல்லியில் 2023ம் ஆண்டின் காற்றுத் தரம் குறித்த கண்ணோட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.;
தேசிய தலைநகரப் பகுதியான டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தர கண்காணிப்புக்காக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்) 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் மூலம், டெல்லி-தேசிய தலைநகரப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் மற்றும் கள நடவடிக்கைகளை இது தொடங்கியது.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது டெல்லியில் பொதுவான காற்றின் தர அளவுருக்கள் மேம்பட்டுள்ளன. கொவிட் பாதிப்புக் காரணமாக 2020 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த போக்குவரத்து, தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள் இருந்தன. முழு ஊரடங்குகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக அந்த ஆண்டின் ஒட்டுமொத்த காற்றின் தரம் முன்னேறியது.
2020 ஆம் ஆண்டைத் தவிர, கடந்த சில ஆண்டுகளில் மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் 4 மாதங்கள் (மார்ச், ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை) சிறந்த தினசரி சராசரி காற்றுத் தரக் குறியீடு பதிவானது. 3 மாதங்கள் (ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே) 2018க்கு பிறகு இரண்டாவது சிறந்த தினசரி சராசரி காற்றுத் தரக் குறியீடு பதிவானது.
2023 ஆம் ஆண்டு முழுவதும் டெல்லியின் சராசரி தினசரி காற்றுத் தரக் குறியீடு, 2020-ஐ தவிர 2018 முதல் உள்ள ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகச் சிறந்ததாக இருந்தது. தினசரி சராசரி காற்றுத் தரக் குறியீட்டுத் தரவரிசையின் அடிப்படையில் காற்றின் தர வகைக்கான மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அளவுகோல்களின்படி, 2023 ஆம் ஆண்டில் “நல்ல முதல் மிதமான" தரக் குறியீடு 200 நாட்களுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
கடுமையான தரக் குறியீடு கொண்ட நாட்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 15 ஆக இருந்தது, இது 2018 - 2023 க்கு இடையிலான காலகட்டத்தில் 2020-ம் ஆண்டைத் தவிர இது இரண்டாவது குறைந்த கடுமையான குறியீடு பதிவான ஆண்டாகும்.
2023 ஆம் ஆண்டில் நெல் அறுவடை பருவத்தில் பயிர்க் கழிவுகள் எரிப்பு, பண்டிகைகள், திருமணங்கள் கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது போன்ற நிகழ்வுகள் மிகக் குறைந்த அளவில் இருந்தன. தொடர்ச்சியான கள அளவிலான முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லிக்கான மாத வாரியான தினசரி சராசரி காற்றுத்தரம்:
தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லி காற்றுத் தரம் ஒப்பீடு: