ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு: மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை

மும்பையில், ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-11 05:30 GMT

இந்தியாவில், அதிகாரபூர்வமாக ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை, 32 ஆக அதிகரித்துள்ள நிலையில் அதில் 17 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, நேற்று ஒரேநாளில் 7 பேருக்கு கொரோனா தொற்றின் ஒமிக்ரான் வகை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்றும் நாளையும்,  மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், மும்பையில், 144 தடை உத்தரவைக் காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர்.

மும்பை காவல் துணை ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் எந்தவிதமான போராட்டம், பேரணிகள், கூட்டங்கள், வாகன அணிவகுப்பு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News