ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள்: பிரதமர் மகிழ்ச்சி

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க 100-ஐ எட்டியதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-28 11:26 GMT

பிரதமர் மோடி.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க 100-ஐ எட்டியதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கள் 100-வது பதக்கத்தை வென்றதற்குப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வரலாற்று சாதனைக்காக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ள பதிவில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள்! ஈடு இணையற்ற மகிழ்ச்சியின் தருணம். இந்த வெற்றி நமது விளையாட்டு வீரர்களின் திறமை, கடின உழைப்பு மற்றும் உறுதியின் விளைவாகும்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை நம் இதயங்களை மிகுந்த பெருமிதத்தால் நிரப்புகிறது. நமது வெல்வதற்கரிய விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் ஆதரவு அமைப்புக்கும் எனது ஆழ்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. நமது இளைஞர்களுக்கு முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானி, சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானி, சவுந்தர்யா பிரதான், அஸ்வினு, ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் யாதவ் மற்றும் ஆடவர் 400 மீட்டர் மற்றும் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற திலீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News