சுற்றுச்சூழல் ஆர்வலரான சுந்தர்லால் பகுகுணா கொரோனாவால் உயிரிழந்தார்.
தனது வாழ்கையை இயற்கைக்காக அர்ப்பணித்தவர் இவர்.
தனது வாழ்கையை இயற்கைக்காக அர்ப்பணித்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சுந்தர்லால் பகுகுணா கொரோனாவால் இன்று உயிரிழந்தார்
தனது வாழ்கையை இயற்கைக்காக அர்ப்பணித்த இவர்.1927 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் தெஹ்ரி கிராமத்தில் பிறந்த சுந்தர்லால் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, காந்தியவாதி ஆனார். ஆகையால் அவரது போராட்டங்களும் அறவழியிலேயே அமைந்திருந்தன.
இந்தியாவின் சுற்றுசூழல் வரலாற்றில் மரங்களை காக்க பெண்களால் முன்னெடுக்கப்பட்ட 'சிப்கோ' இயக்கத்தை கடந்த 1973 ஆம் ஆண்டு தொடங்கியவர் இவரே.
காடுகள் அழிப்பை எதிர்த்து குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் அது குறித்தான கல்வியை கிராமங்களுக்கு கொண்டு சென்று இமயமலை மற்றும் காடுகள் அழிப்புகளை எதிர்த்து போராடினார். இவரது தொடர் முயற்சியால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மரங்கள் வெட்டுவதற்கு தடை விதித்தார். "சூழலியல்தான் நிரந்தர பொருளாதாரம்" என்பதே இவரின் கோட்பாடு.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவருக்கு வயது 94 என்பது குறிப்பிடத்தக்கது.