பாலுக்குப் பதில் சோயா சாறை குடிக்கச் சொல்வதா..? பீட்டாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

"மாடுகளிடமிருந்து பால் கறக்ககூடாது, சோயாவிலிருந்து பாலை எடுத்து குடி - வணிகக் கொள்ளைக்கு துணை போகும் பீட்டா..?

Update: 2021-06-05 04:24 GMT

மாடுகளிடமிருந்து பால் கறக்ககூடாது , அதற்கு பதிலாக சோயாவிலிருந்து பாலை எடுத்து குடி என்கிறது பீட்டா.  இந்திய மக்களின் பொருளாதரத்தை கெடுத்து, தன்மானத்தை சீண்டுகிறது பீட்டா அமைப்பு. அதை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இப்போது வலுக்கிறது.

இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்டது அமுல் நிறுவனம். குஜராத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தைப் பின்பற்றி பல மாநிலங்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் 'மாட்டுப் பாலுக்குப் பதில் சோயா பால் உட்பட சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும்'' என்று இந்தியாவின் மிகப்பெரிய அமுல் நிறுவனத்துக்கு 'பீட்டா' அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.

யார் இந்த பீட்டா ..?

பீட்டா என்பது அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் விலங்குகள் நல உரிமை அமைப்பாகும்.

இறைச்சிக்காகவும், தோல் ஆடைகளுக்காகவும், ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்வதற்கும், சர்க்கஸ் போன்ற பொழுது போக்குகளுக்காகவும் விலங்குகளை பயன்படுத்தி சித்ரவதை செய்ய கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

பீட்டா அமெரிக்கா உட்பட பிற நாடுகளை பார்க்கும் கண்ணோட்டத்தில் இந்தியாவையும் பார்க்க கூடாது. ஜீவகாருண்யம், அகிம்சை பற்றி இந்திய மக்களுக்கு பீட்டா சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பீட்டா அமைப்பு தவறான புரிதலோடு செயல்படுகிறதா..? அல்லது உள்நோக்கம் கொண்டு செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது..

பீட்டா அமைப்பு தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல், அதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடுத்து தடுத்தது. எனினும், மக்கள் சக்தி போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

விலங்குகளின் நல்வாழ்வுக்காகச் செயல்படுவதாக கூறும் பீட்டா அமைப்பு இப்போது அடுத்த பிரச்சனையை கிளப்பியுள்ளது..

அமுல் நிறுவனத்தை பசும் பால் உற்பத்தியிலிருந்து வீகன் பால் உற்பத்திக்கு மாற வேண்டும் என்று கோரியுள்ளது.

வீகன் பால் என்பது பசு, எருமை யிடமிருந்து பெறும் பால் கிடையாது..

முழுக்க முழுக்க தாவரங்களில் இருந்தே தயாரிக்கப்படுவது.

முதலில் பால் வேறு , சாறு வேறு இரண்டும் ஒரே உணவல்ல என்பதை புரிய வேண்டும்.

''இந்தியாவில் தினமும் பால் வாங்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். அப்படி இருக்கும் போது, அதிக விலை கொடுத்து சோயா பாலை எப்படி வாங்க முடியும்''

நடுத்தர குடும்பங்களால் வாங்க முடியாத வீகன் பால் தயாரிக்க வேண்டும் என்று பீட்டா நிறுவனம் சொல்வது வணிக தந்திரம் தான்.. நம் நாட்டின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் வேளாண்மையை அடிப்படையாக கொண்டே உள்ளது..

அதை தர்க்க வேண்டும் என்ற உள்நோக்கில் பீட்டா செயல்படுவது நன்றாக தெரிகிறது..

''நாங்கள் எதை சாப்பிட வேண்டும் என்று பீட்டா தீர்மானிக்க முடியாது. விரும்பும் உணவுகளை சாப்பிடும் உரிமை எல்லோருக்கும் உள்ளது'' என்று மக்கள் நியாயமான கோபத்துடன் கூறுவதை கேட்க முடிகிறது..

பீட்டாவில் கோரிக்கைக்கு பதில் அளித்து அமுல் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி தெரிவித்ததாவது,

''அமுல்நிறுவனத்தின் மூலம்10 கோடி நிலமற்ற பால் உற்பத்தி விவசாயிகள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பீட்டா வழங்குமா? விவசாயிகள் 10 கோடி பேரில் 70 சதவீதம் பேர் நிலமற்றவர்கள். அவர்களுடைய குழந்தைகளின் கல்வி கட்டணத்தை பீட்டாசெலுத்துமா? அவர்களில் எத்தனை பேர், விலையுயர்ந்த ஆய்வுகள் கொண்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் சைவ உணவை தயாரிக்க முடியும்? அத்துடன் சோயா பாலின் விலை மிகவும் அதிகம். அந்த பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாது'' என்று கூறினார். கடந்த 75 ஆண்டுகளாக உருவாக்கியுள்ள விவசாயிகளின் வளங்களை பணக்கார வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, மரபணு மாற்றப்பட்ட சோயாவை அதிக விலைக்கு சந்தைப்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது" என்று கூறியுள்ளார்..

இதற்கிடையில், அமெரிக்காவின் 'பர்கர் கிங்' இந்திய பிரிவுக்கு 'பீட்டா' அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. அதில், ''சோயா பாலில் தயாரிக்கப்பட்ட ஊப்பர்ஸ்களை (பால் பொருளில் தயாரிக்கப்படும் உணவு உருண்டைகள்) விற்க வேண்டும். இறைச்சி இல்லாத உணவுகளை வழங்க ஜெர்மனியில் உள்ள பர்கர் கிங் முயற்சித்து வருகிறது. இதேபோல் இறைச்சி, பால் பொருட்கள் இல்லாத சைவ தாவர உணவுகளை வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெருவாரியான விவசாயிகள் நிலமற்றவர்கள்.. பீட்டாவினுடைய நோக்கம், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு இருக்கும் அனைத்து வழிகளையும் அழித்துவிட வேண்டும் என்பதே..

விலை உயர்ந்த, தொழிற்சாலைகளில் ரசாயனங்களின் உதவியோடு உருவாக்கப்படும் செயற்கையான பாலை வாங்கி குடி என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது.

இந்தியர்கள் என்றால் இளக்காரமா.. ?

பீட்டாவை இந்தியாவில் தடை செய்வது தான் நிரந்தர தீர்வாக இருக்கும், பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்கிறது.

Tags:    

Similar News