கடப்பாவில் - கஞ்சா பறிமுதல்...

கிட் கேட் பேக்குல என்ன ஒரு வில்லத்தனம்.;

Update: 2021-05-16 06:45 GMT

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. அன்புராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் கடப்பாவில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு விற்பனை செய்து வந்த 6 பேரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் விசாகப்பட்டினம் மாவட்டம் சிந்தப்பள்ளி மண்டலத்தில் இருந்து ஒரு கஞ்சா கடத்தல் கும்பல் கடப்பாவில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பலில் தொடர்புடைய 6 பெண்கள் உள்பட 11 பேரை சின்னசவுக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 120 கிலோ கஞ்சா, ஒரு கார், ரூ .7,000 ரொக்கம் மற்றும் ஐந்து செல்போன்கள் ஆகியவற்றை சின்னசவுக் போலீசார் பறிமுதல் செய்தனர்.


கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக் கூடிய நிலையில் இதுபோன்ற கஞ்சா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவது மேலும் வைரஸ் பரவல் அதிகப்படுத்துவதோடு உடல் ஆரோக்கியமும் வேகமாக பாதிக்ககூடிய நிலை ஏற்படும்.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் யாராவது கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தால் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் ரகசியமாக வைத்து குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள்என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News