குஜராத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவு.
டவ்-தே புயல் தற்போது மிரட்டி வரும் வேளையில்...;
குஜராத்தில் மாநிலம் ராஜ்கோட் நகருக்கு தெற்கே லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகருக்கு தெற்கே 182 கி.மீ., தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
டவ்-தே புயல் தற்போது மிரட்டி வரும் வேளையில் இன்று அதிகாலை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.