ஒன்றாக கட்டப்பட்டிருந்த 3 சிறுமிகள், 2 பேர் உயிரிழப்பு

Update: 2021-02-18 06:37 GMT

உத்தரப் பிரதேசதில் மாட்டுக்கு தீவனம் வாங்கச் சென்ற 3 சிறுமிகள் ஒன்றாக கட்டப்பட்டிருந்ததுடன் இருவர் இறந்த நிலையிலும், ஒருவர் குற்றுயிராகவும் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 13,16 வயது மதிக்கதக்க சகோதரிகள் இருவர் தங்களுடைய 17 வயது உறவுக்கார சிறுமியுடன் மாட்டுக்கு தீவனம் வாங்க சென்றுள்ளனர். மாலைநேரம் ஆகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால் சிறுமிகளின் குடும்பத்தார் அவர்களைத் தேடிச் சென்றிருக்கின்றனர்.

இதில் அந்த மூன்று சிறுமிகளும் துப்பட்டாவால் ஒன்றாக சேர்த்துக் கட்டப்பட்டு வயலில் கிடந்ததை பார்த்துள்ளனர். சிறுமிகளை காப்பாற்ற எண்ணி கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இரண்டு சிறுமிகள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 17 வயது சிறுமி மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததால் அவரை கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிறுமிகள் விஷம் அருந்தியதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, இறந்த இரண்டு சிறுமிகளின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

Tags:    

Similar News