நாடு முழுவதும் ஐஐடி கேட் 2021 தேர்வு நாளை தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 27 பாடப் பிரிவுகளில் சேர இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் 2021- 22ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு நாளை (பிப்ரவரி 5) தொடங்குகிறது. தொடர்ந்து பிப்.6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடப் பிரிவு வாரியாகத் தேர்வுகள் நடக்க உள்ளன. சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். இத்தேர்வை மும்பை ஐஐடி நடத்துகிறது. கொரோனா பரவல் காரணமாக தேர்வர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.