வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு: நிறுவனங்களுக்கும் அவகாசம்

கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது

Update: 2021-05-21 03:35 GMT

வருமானவரி செலுத்த கால அவகாசம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனி நபர்கள், 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.

நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

2020-21 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31ஆம் தேதியும் நிறுவனங்கள் வருமானவரி தாக்கல் செய்ய அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிநபர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததற்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி வரையும், நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரையும், திருத்தப்பட்ட வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.


Tags:    

Similar News