டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 26 ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.அதற்கு நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கினர். ஆனால் பேரணியில் பிரச்சனை ஏற்பட்டு ,விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் செங்கோட்டையிலும் அனுமதியின்றி விவசாயிகள் கூடினர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே நிபந்தனைகளை மீறியதாக 20 விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.யோகேந்திர யாதவ், பல்தேவ் சிங் சிர்ஸா, பல்பீர் எஸ் ராஜீவால் உள்ளிட்ட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 3 நாள்களில் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்றும் டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.