கோவிட்-19 தடுப்பூசி-3வது இடம் பிடித்த இந்தியா

Update: 2021-02-08 05:48 GMT

அதிக பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

அதிக பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியா இந்த இடத்தைப் பிடித்துள்ளது.இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 6,73,542 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 53,04,546 சுகாதார பணியாளர்களுக்கும், 4,70,776 முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,875 முகாம்களில் 3,58,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.48 லட்சமாகக் (1,48,766) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.37 சதவீதமாகும். நாட்டில் மொத்தமாக 1,05,22,601 பேர் (97.19%) குணமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News