ஜார்கண்ட் ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமனம்
மகாராஷ்டிரா மற்றும் லடாக் கவர்னர்கள் சமீபத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து 13 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.;
மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் லடாக் லெப்டினன்ட் கவர்னர் ராதா கிருஷ்ணன் மாத்தூர் ஆகியோரின் ராஜினாமாக்களை இந்திய குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.
பின்வரும் நியமனங்களை இந்தியக் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்
அருணாச்சல பிரதேச ஆளுநராகலெப்டினன்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், பிவிஎஸ்எம், யுஒய்எஸ்எம், ஒய்எஸ்எம் (ஓய்வு பெற்றவர்)
சிக்கிமின் ஆளுநராக ஸ்ரீ லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா
ஜார்கண்ட் ஆளுநராகஸ்ரீ சிபி ராதாகிருஷ்ணன்
இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக ஷிவ் பிரதாப் சுக்லா
அஸ்ஸாமின் ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா
ஆந்திரப் பிரதேச ஆளுநராக நீதியரசர் (ஓய்வு) எஸ். அப்துல் நசீர்
(vii) ஆந்திரப் பிரதேச ஆளுநர் ஸ்ரீ பிஸ்வா பூசன் ஹரிசந்தன் சத்தீஸ்கரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
சத்தீஸ்கரின் ஆளுநர் சுஸ்ரி அனுசுயா உய்க்யே, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
மணிப்பூர் ஆளுநர் கணேசன், நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார்
பீகார் ஆளுநர் பாகு சவுகான், மேகாலயாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
இமாச்சலப் பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
மகாராஷ்டிராவின் ஆளுநராக ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் நியமிக்கப்பட்டார்
பிரிக். (டாக்டர்.) ஸ்ரீ பி.டி. மிஸ்ரா (ஓய்வு), அருணாச்சல பிரதேச ஆளுநர் லடாக்கின் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
மேற்கண்ட நியமனங்கள் அவர்கள் அந்தந்த அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.