உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற வேண்டாம்: வெளியுறவுத்துறை

உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.;

Update: 2022-03-05 13:15 GMT

உக்ரைன் மீது இன்று 10வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்த நிலையில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தது. உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.இந்நிலையில் சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள், உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்வதாக காணொளி வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை, "உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News