தீ விபத்தில் ரூ1000 கோடி இழப்பு: சீரம் நிறுவனம் தகவல்
கொரோனா தடுப்பு மருந்துக்கு பாதிப்பு இல்லை;
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இங்கு கோவிஷீல்டு மருந்து தயார் செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் நடந்த தீ விபத்தால் ரூ 1000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் ஏற்பட்ட தீவிபத்தில் இதில் 5 பேர் பலியானார்கள். சம்பவம் நடந்த கட்டடத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடந்தது, இதனால் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் இடத்தில் எந்த பாதிப்பும் இல்லை.