மார்ச் 1 ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர்களுக்கான கொரோனா தடுப்பூசி, அரசின் 10 ஆயிரம் தடுப்பூசி மையங்களில் இலவசமாக போடப்படும்.தனியாரில் தடுப்பூசி போட விரும்புபவர்கள், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என பிரகாஷ் ஜவ்டேகர் கூறினார். முன்னதாக கடந்த ஜனவரி 16 ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும், மருத்துவதுறையினர், காவல்துறையினருக்கு காெரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.