உலக உயர் இரத்த அழுத்த தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
உலக ஹைப்பர்டென்ஷன் தினம் ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பொதுவாக இன்று பலருக்கும் உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. இதற்கு அதிகபட்ச காரணங்களாக மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு , பரம்பரையாக தொடரும் பிரச்னை போன்றவை கூறப்படுகின்றன.
இதைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஃபிரெஷ்ஷாக வீட்டில் சமைத்த உணவுகளை சரியான நேரத்தில் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். குறிப்பாக பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
இரத்த அழுத்தம் உள்ளவர்களை மருத்துவர்களே உப்பு மற்றும் கொழுப்பை அதிகம் சேர்த்துக்கொள்ளாதீர்கள் என்று கூறுவார்கள்.உடல் உறுப்புகள் சீராக இயங்க முடிந்த உடற்பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்களாவது செய்வது அவசியம்.
அடிக்கடி உங்கள் இரத்த அழுத்த அளவை டெஸ்ட் செய்து தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அது உயர்ந்தாலும் கட்டுப்படுத்தும் விஷயங்களை செய்ய முடியும்.மருத்துவர் பரிந்துரைத்துள்ள மாத்திரைகளை தவறாமல் தினமும் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.