அரசுப்பேருந்து ஆக்சிஜனுடன் கூடிய பேருந்தானது - ஆந்திரா
ஜகன் அண்ணா பிராணவாயு ரதம்.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்காக அரசுப்பேருந்தை ஆக்சிஜனுடன் கூடிய பேருந்தாக மாற்றி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பேருந்துவிற்கு ஜகன் அண்ணா பிராணவாயு ரதமாக பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இதனால் மருத்துவமனையிலும் படுக்கைகள் இல்லை இதனால் நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் எம்.பி. மார்கானி பரத்திற்கு ஏற்பட்ட ஆலோசனையின் மூலம் ஆந்திர மாநில அரசின் படுக்கையுடன் கூடிய குளிர்சாதனப் பேருந்துகளை ஆக்ஸிஜன் பொருத்தி பிரானவாயு ரதமாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தார்.
இதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்த நிலையில் இரண்டு பேருந்துகள் பிராணவாயு ரதமாக மாற்றி வடிவமைக்கப்பட்டது. இந்த பேருந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கிடைக்காதவரை அவசர மருத்துவ சேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு பேருந்திலும் 20 பேர் வரை ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சிகிச்சை பெறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு மினி தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் முதலில் ராஜமகேந்திரவரத்தில் எம்.பி.பரத் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா பாசிட்டிவ் வந்த பிறகு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு இந்த பேருந்துகளில் அவசரமாக சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்தவுடன் இங்கு சிகிச்சை பெறக் கூடிய நோயாளிகளை மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட உள்ளது.
ராஜமுந்திரி நகரில் முதல்முறையாக, கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருந்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறை வெற்றிகரமாக செயல்படுத்திய பிறகு முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் மாநிலம் முழுவதும் இதே போன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஜெகன் அண்ணா பிராணவாயு ரதம் என்ற பெயரில் இதேபோன்று பேருந்துகளை மறு வடிவமைப்பு செய்து கொரோனா நோயாளிகளுக்காக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தனது ஆலோசனையில் உதித்த இந்த புதிய சிந்தனை கொரோனா நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தால் அதுவே தனக்கு கிடைத்த பெரும் மகிழ்ச்சி என எம்.பி. பரத் தெரிவித்தார்.