விமான சேவை கட்டணம் உயர்வு !

Update: 2021-03-20 12:15 GMT

 உள்ளூர் விமான சேவைகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 5 சதவிகிதம் அளவிற்கு உயர்த்துவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், அதிகபட்ச கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டண முறை, ஏப்ரல் மாத இறுதியில் இருந்து, அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டணம், கடந்த மாதம் 10 முதல் 30 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்தினால், 100 சதவீத விமானங்கள் மீண்டும் இயக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.




 


Tags:    

Similar News