கொரோனா தடுப்பூசி பயனாளிகளின் விவரம் மத்திய அமைச்சர் பதில்

Update: 2021-03-20 03:45 GMT

 மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு பரிந்துரைப்படி ( National Expert Group on Vaccine Administration for COVID-19  (NEGVAC)),), கீழ்கண்ட பிரிவினர் கொரோனா-19 தடுப்பூசி போட தகுதியான பிரிவினர்:

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்கள்.தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவை Co-WIN 2.0 இணையதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலம் செய்யலாம்.

கோவின் 2.0 இணையதளத்தில், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஸ்மார்ட் அட்டை, போட்டோவுடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.

இதில் தடுப்பூசி போடும் மையத்தையும், கோ-வின் 2.0 இணையளத்தில் உள்ள பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்ந்தெடுக்க முடியும்.021 மார்ச் 15ம் தேதி வரை, மொத்தம் 3.05 கோடி பயனாளிகள் கோ-வின் 2.0 இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

45 முதல் 59 வயதுக்குட்பட்ட மக்களின் தகுதியை தீர்மானிக்கும் 20 குறிப்பிடப்பட்ட இணை நோய்களின் பட்டியல்

1. கடந்த ஓராண்டில் இதய செயலிழப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்.

2. இதய அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள் / இடது வென்ட்ரிகுலர் உதவி சாதனம் (எல்விஏடி) பொருத்தியவர்கள்.

3. இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் (LVEF <40%)

4. மிதமான அல்லது கடுமையான இதய வால்வு நோய் உள்ளவர்கள்.

5. பிறவி இதய நோய் உள்ளவர்கள்.

6. இதய தமனி நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு சிகிச்சையில் உள்ளவர்கள்.

7. ஆஞ்சினா மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய் சிகிச்சையில் உள்ளவர்கள்.

8. சி.டி / எம்.ஆர்.ஐ ஆவணப்படுத்தப்பட்ட பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு சிகிச்சையில் உள்ளவர்கள்.

9. நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு சிகிச்சையில் உள்ளவர்கள்.

10. நீரிழிவு நோய் ( 10 ஆண்டுகள் அல்லது சிக்கல்களுடன்) மற்றும் உயர் இரத்த அழுத்தம் சிகிச்சையில் உள்ளவர்கள்.

11. சிறுநீரகம் / கல்லீரல் / ஹீமாடோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள்: பெறுநர் / காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள்.

12. சிறுநீரக நோய் இறுதி நிலையில் ஹீமோடையாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்கள்.

13. வாய்வழி கார்டிகோஸ்டீராய்டுகள் / நோயெதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்துவோர்.

14. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள்.

15. கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான சுவாச நோயுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்  /             FEV1 <50%.

16. லிம்போமா / லுகேமியா / மைலோமா பாதிப்பு உள்ளவர்கள்.

17. புற்று நோய் சிகிச்சையில் உள்ளவர்கள்.

18. இரத்த சோகை நோய் / எலும்பு மஜ்ஜை செயலிழப்பு / அப்பிளாஸ்டிக் அனீமியா / தலசீமியா மேஜர் பாதிப்புகள்.

19. முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு நோய்கள் / எச்.ஐ.வி தொற்று பாதிப்புகள்.

20. அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்கள் / தசைநார் நோய் / சுவாச மண்டலத்தின் ஈடுபாட்டுடன் ஆசிட் தாக்குதல் / அதிக ஆதரவு தேவைகளைக் கொண்ட குறைபாடுகள் உள்ளவர்கள் / காது கேளாதோர் உட்பட பல குறைபாடுகள் உள்ளவர்கள். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

Tags:    

Similar News