டெல்லிக்குள் மீண்டும் நுழைவோம் - விவசாய அமைப்புகள்

Update: 2021-03-14 03:30 GMT

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ளது. விவசாய அமைப்புகள் தற்போது தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், பாஜக எதிராக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில், விவசாய கூட்டமைப்பு சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பாஜகவை வீழ்த்தும் வேட்பாளருக்கு வாக்குகளை அளிக்குமாறு வாக்காளர்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

செய்தியாளர்களை சந்தித்த பாரதிய கிஸான் சங்க நிர்வாகி ராகேஷ் திகையத், நாடாளுமன்ற வளாகத்தில் விவசாய விளைப்பொருட்களை விற்பனை செய்யும் மண்டி தொடங்கப்படும்.மீண்டும் டெல்லிக்குள் நுழைவோம் என்றார். 


Tags:    

Similar News