மார்ச் 13 முதல் 15 வரை உத்தரபிரதேசத்திற்கு குடியரசுத் தலைவர் பயணம்,குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், 2021 மார்ச் 13 முதல் 15 வரை உத்திரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
2021 மார்ச் 13 பிற்பகலில் அவர் வாரணாசி சென்றடைவார். 2021 மார்ச் 14 அன்று சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சப்கிக்கு செல்லும் குடியரசுத் தலைவர், வன்வாசி சமாகத்தில் கலந்து கொண்டு சேவா குன்ஜ் ஆசிரமத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
2021 மார்ச் 15 அன்று, கங்கை, சுற்றுச்சூழல் மற்றும் இந்திய கலாச்சாரம் குறித்த ஜாக்ரன் அமைப்பு நிகழ்ச்சியின் துவக்க விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.தைனிக் ஜாக்ரனால் வாரணாசியில் இந்நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.