பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை

Update: 2021-03-10 04:00 GMT

பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் அல் பத்ர் என்ற இயக்கத்தின் தலைவனாகக் கருதப்பட்ட கானி க்வாஜா என்பவன் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடந்த மோதலில் கானி க்வாஜாவை போலீசார் சுட்டுக் கொன்றனர். கானி கொல்லப்பட்டது தங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News