கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள பல அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 8 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர். அந்த கட்டிடத்தின் 13-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 4 தீயணைப்பு படை வீரர்கள், 2 ரெயில்வே அதிகாரி, ஒரு காவல் அதிகாரி உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.தீ விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
கொல்கத்தாவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களை எண்ணி மிகவும் துயருற்றேன். இந்த சோகமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும், என்று பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.