பொம்மைத் தயாரிப்பாளா்கள் குறைந்த அளவிலான பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.
இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சியை பிரதமா் மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தாா்.சுமாா் ஆயிரம் பொம்மை தயாரிப்பாளா்கள் பங்கேற்ற இந்த இணையவழி கண்காட்சி மாா்ச் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரதமா் மோடி பேசும் போது, சா்வதேச பொம்மை சந்தையில் இந்தியாவின் பங்கு 100 பில்லியன் டாலராக உள்ளது. இது குறைவான பங்காகும். இதை அதிகரிக்க வேண்டும். இந்திய தயாரிப்புகளுக்கு தற்போது பெரும் ஆதரவு இருப்பதைப்போல், இந்தியா்களின் கைகளால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் ஆதரவு பெருகும்.
பொம்மைத் தயாரிப்பாளா்கள் மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்கை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும், சூழலியலுக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்தியாவின் விளையாட்டு பொம்மைகளை பிரபலப்படுத்தடாய்யதான்-2021 என்ற கண்காட்சி நடத்தப்படும் என்றாா்.