கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய தடுப்பூசி நிர்வாக அதிகாரி சர்மா, இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அது போல் அருகில் தடுப்பூசி போடும் இடங்களுக்கு நேரடியாக சென்றும் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.