சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்

Update: 2021-02-18 06:47 GMT

காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்ற பெண் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாகியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் சப்னம்ங.இவர் அதே ஊரைச் சேர்ந்த சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், சப்னம் -சலீம் காதலை பெண் வீட்டார் ஏற்கவில்லை. தொடர்ந்து , சப்னம் தன் காதலருடன் சேர்ந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தன் குடும்பத்தினருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து மயங்க செய்துள்ளார். பின்னர், தன் பெற்றோர், இரண்டு அண்ணன்கள், அவர்களின் இரு மனைவிகள் அண்ணனின் 10 மாத ஆண்குழந்தை ஆகியோரை தன் காதலருடன் சேர்ந்து சப்னம் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கு அம்ரோ மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டு சப்னம் மற்றும் சலீமுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் , உச்சநீதிமன்றத்திலும் இருவரின் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும், சப்னத்தின் கருணைமனுவையும் உபி ஆளுனர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் தள்ளுபடி செய்து விட்டனர்.தற்போது, சலீம் ஆக்ரா சிறையிலும் சப்னம் ராம்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரா மாவட்ட நிர்வாகம் சப்னத்தை தூக்கிலிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. டெத் வாரன்ட் வழங்கப்பட்டதும் மதுரா சிறைக்கு சப்னா மாற்றப்பட்டு தூக்கிலிடப்படுவார்.சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்

Tags:    

Similar News