புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு

Update: 2021-02-16 05:49 GMT

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கந்தசாமி எம்எல்ஏ., தகவல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏ. கள் தேவையான நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆக உள்ளது. இதனால் நாராயணசாமி அரசுபெரும்பான்மையை இழந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கந்தசாமி எம்எல்ஏ., தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News