வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி

Update: 2021-02-15 07:40 GMT

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றே கடைசி நாள் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் பாதிப்பால் ஏற்பட்ட தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அவகாசம் பிப்ரவரி.15 வரை மத்திய அரசு நீட்டித்து அறிவித்திருந்தது. அதன்படி, வரி செலுத்துவோர் அபராதமின்றி, தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் நாளை முதல் அபராதம் செலுத்தியே வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News