கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா- ஜனாதிபதி பெருமிதம்

Update: 2021-02-12 05:15 GMT

உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கி நன்மதிப்பை பெற்றிருப்பதாக ஜனாதிபதி பெருமிதம் தெரிவித்தார்.

புதிதாக பதவியேற்ற எல்சால்வடார் குடியரசு, பனாமா, துனிசியா, பிரிட்டன், அர்ஜென்டினா ஆகிய நாட்டு தூதர்களின் நியமனத்தை ஜனாதிபதி அங்கீகரிக்கும் நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெற்றது. அப்போது பேசிய ராம்நாத்கோவிந்த்,இந்தியாவின் தடுப்பூசி உதவித் திட்டத்தின் கீழ், மிகக் குறைந்த விலையிலான கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு பல நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.

Tags:    

Similar News