ஓடிடியில் வெளியாகும் படங்கள் இனி கண்காணிக்கப்படும்

ஓடிடியில் திரைப்படம் மற்றும் தொடர்கள் ரிலீஸ் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாகவும், விரைவில் அவற்றை வெளியிட இருப்பதாகவும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-02-10 15:03 GMT

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் அதிகமாக பாலியல் காட்சிகள், வன்முறைகள், தகாத சொற்கள் பேசுவது போன்றவைக்கு கட்டுபாடுகள் இல்லாததால், அவை பார்ப்பவர்களின் மனதை புண்படுத்தலாம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் ஓடிடியில் வெளியாகும் படைப்புகளை கண்காணிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஓடிடியில் திரைப்படம் மற்றும் தொடர்கள் ரிலீஸ் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாகவும், விரைவில் அவற்றை வெளியிட இருப்பதாகவும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News