அலகாபாத் ராணுவ மையத்தில் ராமநாதபுரம் வீரர் பழனிக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி, லடாக் எல்லை பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலுார் ராணுவ ஹவில்தார் பழனி (40) வீர மரணமடைந்தார். குடியரசு தின விழாவையொட்டி நாட்டுக்காக வீர மரணமடைந்த பழனிக்கு, ராணுவத்தின் உயரிய வீர் சக்ரா' விருது அறிவிக்கப்பட்டது.
மேலும், ராணுவ வீரர் பழனி அலகாபாத் ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றியதால், அங்குள்ள ராணுவ மையத்தில் ஒரு கட்டிடத்துக்கு 'ஹவில்தார் வீர் கே.பழனி அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், அதன் நுழைவாயிலில் பழனியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.