நண்பருக்காக கண்கலங்கிய பிரதமர் மோடி

Update: 2021-02-09 08:03 GMT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், கட்சிக்காக மட்டும் அல்லாமல் நாட்டிற்காக கவலைப்பட்டவர் என அவரது பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15 ம் தேதி முடிவுக்கு வருகிறது. மாநிலங்களவையில் ஓய்வு பெறும் எம்.பி.க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.அப்போது குலாம் நபி ஆசாத்தை பாராட்டி உருக்கமாக பிரதமர் மோடி பேசினார்.

குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர். அவரது இடத்திற்கு வரும் புதிய தலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது. அவரது கருத்துக்கள் என்றும் தேவைப்படும். அவருக்கு நான் தலைவணங்குகிறேன். ஆசாத்துக்காக என் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றார். மேலும் ஆசாத் சல்யூட் என நெற்றியில் கை வைத்து அடித்து காட்டினார். இந்நேரத்தில் அவையில் இருந்த உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர்.

Tags:    

Similar News