குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் நாளை (பிப் 6) பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார்.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றவிருக்கிறார். குஜராத் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 வருடங்கள் ஆனதை குறிக்கும் விதமாக தபால்தலை ஒன்றையும் அவர் வெளியிடுகிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர், உச்ச நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், குஜராத் முதல்வர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.