பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், பிரதமர்மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீர் செய்ய பல அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டதாக கூறினார்.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும், முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனநாயக முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்த பிரதமர் , எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.