அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயெத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
கொரோனா பாதிப்பு குறித்து விவாதித்த இரு தலைவர்களும், சுகாதார நெருக்கடியின் போதும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையேயான ஒத்துழைப்பு இடைவிடாது தொடர்ந்தது குறித்து திருப்தி தெரிவித்தனர். கொரோனாவிற்கு பிறகு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையேயான ஒத்துழைப்பையும், நெருங்கிய தொடர்புகளையும் தொடர இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக, வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். கொரோனா நெருக்கடியை விரைவில் வெற்றி கொள்ளலாம் என்று நம்பிக்கை தெரிவித்த இரு தலைவர்களும், விரைவில் நேரில் சந்தித்து கொள்வதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்கள்.