லாலா லஜபதி ராய் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
1865 ம் ஆண்டு , ஜன. 28ல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் துடிகே என்ற கிராமத்தில் பிறந்தவர் லாலாலஜபதிராய். சட்டம் பயின்ற இவர் நாட்டு விடுதலைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தார். லாஹூரில் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது) இருந்தபடி தனது எழுத்தாலும் பேச்சாலும் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த லாலா லஜபதி ராய் பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் விடுத்துள்ள சுட்டுரையில், மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான, பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் பிறந்த நாளான இன்று அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது. தலைமுறைகள் தாண்டியும் மக்களை ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறது. அந்த அரும்பெரும் தலைவரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவோம் என்று கூறியுள்ளார்.