தடுப்பூசி வதந்தி- உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Update: 2021-01-27 06:42 GMT

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி இந்தியாவில் களப்பணியாளர்கள், மருத்துவதுறையினருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அவர் எழுதிய கடிதத்தில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய கொரோனா தடுப்பு மருந்து குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது பேரழிவு மேலாண்மைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான தகவல், வதந்திகள் பரப்புபவர்களுக்கு இணையாக, உண்மைச் செய்திகளை உடனடியாகப் பரப்புவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News