டெல்லியில் இணையதள சேவைகள் துண்டிப்பு

Update: 2021-01-26 10:36 GMT

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் நடத்திய பேரணி தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று சுமார் 500 டிராக்டர்களுடன் செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். டெல்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது.

இந்நிலையில் டிராக்டர் பேரணி தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் இன்று நள்ளிரவு வரை இணையதள சேவைகளை துண்டித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News