அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்கியதற்காக இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20-ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.மத்திய அரசின் இந்த செயலை உலக சுகாதார அமைப்பு தலைவர் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து பங்காற்றி வரும் இந்தியா மற்றும் அதன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.