வாரணாசியில் கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடனும், தடுப்பூசியை செலுத்துபவர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடுகிறார்.
வாரணாசியில் கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடனும், தடுப்பூசியை செலுத்துபவர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுகிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகள், தடுப்பூசி குறித்த தங்களது முதல்கட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் திட்டத்தை சுமுகமாக மேற்கொள்வது தொடர்பாக விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், இதர பங்குதாரர்களுடன் பிரதமர் மோடி தொடர் ஆலோசனைகளில் ஈடுபடுவார்.